#தற்கொலை_தொடரும்
மனச்சோர்வு , மன இறுக்கம் , விரக்தி எல்லோருக்கும் வருவது இயல்புதான் . எல்லோரைப் பற்றியும் எனக்கென்ன தெரியும் நான் என்னைப் பற்றியே பேசுகிறேன் .
ஆமாம் என்னைப்போன்றவனுக்கு மனச்சோர்வு , உளைச்சல் எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம். என் பால்ய வயது வரலாறு அப்படி . அதுகிடக்கட்டும் எனக்கு ஏன் கடந்த ஆறு மாதங்களாக இப்படியாகவே இருக்கிறதே என்று ஒரு விசனம் .
" நீ சரியாக தூங்குவதில்லை அதுதான் உன் உளைச்சலுக்கு காரணம் " என்று அறிவுறுத்தினார்கள் பெண்தோழிகளும், சகாக்களும்.
" நீ அதிகம் விரும்பி உண்பதில்லை " அதுதான் காரணம் என்றார் அப்பா.
" நீ உன் ஓய்வு நேரத்தை புத்தகம் படிப்பதில் தீவிரப்பட்டிருப்பது " ஆபத்து என அறைத்தோழர்களோ அச்சுறுத்தினர் .
" நீ ஓயாம போன் நோண்டுவே " என அம்மாவோ கடுப்பேற்றினார் .
"ஜீ நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க ஜீ " என்று ஜீக்கள் ஜீவியது
ஆனால் எனக்கு மட்டும் தெரியும் . எப்படி தெரியும் என்று கேட்க கூடாது .எனக்கு தெரியும். நான் மகிழ்ச்சியாக,இயல்பாக இருக்க என் மூளைக்குள் ஒரு சுரப்பி ஒன்று சுரந்திருக்க வேண்டும் , அது சில காலங்களாக சுரப்பதில்லை என முடிவுக்கு வந்தேன் .
அதை இவ்வாறாக பூர்த்தி செய்ய இயலுமா என
1.புகை பிடித்தேன் .
சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் மூலம் மூளையில் சுரக்கும்
" டோபமைன் " மகிழ்ச்சியாக இருப்பது போன்ற உணர்வை தூண்டும் . இல்லை அது தற்காலிகமாக கூட பலனளிக்கவில்லை . பயமளித்தது .பயம் நீடித்தது.
2.மது அருந்தினேன் .
மதுவில் உள்ள ஆல்கஹால் மூளையிலுள்ள செர்ரிபுரம் என்ன பகுதியில் சென்று குத்துவதால் நிலை தவறி தள்ளாடி ஒரு மறதி உணர்வை தரும் .
இதற்கு சிகரெட்டே மேல் என்று நினைத்துக்கொண்டேன். உடல்நலத்தீங்கிற்கு சிகரெட்டை விட மது சற்று பரவாயில்லை என்பதறிந்து.
சரி எனக்கு என்னவெல்லாம் நேர்ந்தது என ஓரளவுக்கு சொல்கிறேன் .
1.அடிப்படை குணாதிசயங்களில் மாற்றம்,
2.எதிலும் பிடிப்பின்றி தனியே ஒதுங்கியிருத்தல், 3.அடிக்கடி எரிச்சலடைதல், 4.வழக்கமான வேலைகளில் நாட்டமின்மை (இது ரொம்ப முக்கியம்)
5.அழுகை...கோபம்...துக்கம் ஆகிய உணர்வுகளுக்கு ஆட்படுதல்,
6.தற்கொலை பற்றி சிந்தித்தல் , சாவைப்பற்றி அடிக்கடி பேசுதல்
அவசரம் வேண்டாம் அந்த ஆறாவது நிலை இன்னும் வரவில்லை . இந்நிலை தொடர்ந்தால் நிகழ வாய்ப்புள்ளது.
உண்மையில் ஏன் இந்த இறுக்கமும் , உளைச்சலும் , சலிப்பும் விரக்தியும் , வருகின்றதென்றால்
நான் முன் சொன்னது போல் மூளையில் சுரக்கும் ஏதோ ஒரு சுரப்பி சரியாக சுரக்கவில்லை என்பதே . அந்த சுரப்பி யாதெனின் செரடோனின்
நமது மூளையில் சுரக்கும் #செரடோனின் (serotonin) என்ற வேதிப்பொருள் குறைவாக சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. தற்கொலை செய்துகொண்டவர்களின் மூளையை ஆராய்ந்ததில் imipramine receptor sites குறைவாக இருப்பது தெரியவந்ததாம். Imipramine receptors என்பவை செரடோனின் சுரக்கும் இடங்களாம். செரடோனின் சுரத்தலை தூண்டிவிடும் மருந்துகள் கொடுத்தால் உளைச்சல் குறைந்து தற்கொலை எண்ணம் குறைக்கப்படுமாம் .அந்த மருந்து எங்கே கிடைக்கும் அதைப்பெற மருத்துவர்கள் ஆலோசனை வேண்டும் போல
சரி அந்த செரிடோனின் சுரக்காமல் இருக்க என்ன காரணமாக இருக்கும் என்றால் கடந்த பல மாதங்களாக மேற்படிப்பு படிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி அது ஆசையாக மாறி வெறி என்கிற நிலைக்கு போகாமல் படிக்க முடியவில்லையே என்பது ஏக்கமாக மாறி ஏக்கம் கனவாக மாறி கனவு கைகூடுமா என்கிற சந்தேக நிலையில் இவைகளெல்லாம் உண்டாகியிருக்க கூடும் என்பது என் சப்பைக்கட்டு .
உண்மையில் ஆறு மாத காலமாக இரவு நேரப்பணி (night shift work) தூக்கமின்றி கனவு கண்டேன் .
இப்போது தற்கொலை கட்டுரையில் முடிக்கிறேன் தற்கொலையில் முடிக்காமல் .
தூக்க கலக்கமும்
துக்க கலக்கமும்
நிறைவுறப் போகிறது
நானும் மேற்படிப்பு படிக்கப்போகிறேன்.

Comments
Post a Comment