Posts

Image
                      #தற்கொலை_தொடரும் மனச்சோர்வு , மன இறுக்கம் , விரக்தி எல்லோருக்கும் வருவது இயல்புதான் . எல்லோரைப் பற்றியும் எனக்கென்ன தெரியும் நான் என்னைப் பற்றியே பேசுகிறேன் . ஆமாம் என்னைப்போன்றவனுக்கு மனச்சோர்வு , உளைச்சல் எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.  என் பால்ய வயது வரலாறு அப்படி . அதுகிடக்கட்டும் எனக்கு ஏன்‌ கடந்த ஆறு மாதங்களாக இப்படியாகவே இருக்கிறதே என்று ஒரு விசனம் .  " நீ சரியாக தூங்குவதில்லை அதுதான் உன் உளைச்சலுக்கு காரணம் " என்று அறிவுறுத்தினார்கள் பெண்தோழிகளும், சகாக்களும்.  " நீ அதிகம் விரும்பி உண்பதில்லை " அதுதான் காரணம் என்றார் அப்பா.  " நீ  உன் ஓய்வு நேரத்தை புத்தகம் படிப்பதில் தீவிரப்பட்டிருப்பது " ஆபத்து என அறைத்தோழர்களோ அச்சுறுத்தினர் .  " நீ ஓயாம போன் நோண்டுவே " என அம்மாவோ கடுப்பேற்றினார் . "ஜீ நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க ஜீ " என்று ஜீக்கள் ஜீவியது ஆனால் எனக்கு மட்டும் தெரியும் . எப்படி தெரியும் என்று கேட்க கூடாது .எனக்கு தெரியும். நான் மகிழ்ச்சியாக,இ...

எங்கேயோ பார்த்த மயக்கம்

Image
நள்ளிரவு நேரம் அது. உடல் அசதியிலும் புத்தகத்தின் சில பக்கங்களை படிந்திருந்தபோது ஏற்பட்ட விரக்தியினால் மெல்ல எழுந்து பல நினைவுகளை அசை போட்ட படி கத்தாரின் தொழிற்பேட்டை (இன்டஸ்ட்ரியல் ஏரியா) பகுதியில்  எப்போதும் பரபரப்பாக இயங்கும் பிரதான சாலை ஓரத்தில் ஒன்றில் நடந்துகொண்டிருந்தேன். பகல் நேரங்களில் வாடகை வாகன ஓட்டுநர்கள் "தோகா,தோகா,சனயா,சனையா ச்சலோ ச்சலோ" என இந்தி மொழியில் வண்டிக்கு ஆள் பிடிக்கும் அந்த பரபரப்பான சாலையில் இப்போது  என்னை வரவேற்க யாருமில்லாமல்  வெறிச்சோடி இருந்தது . ஒரு வினாடி எனக்குள் நினைத்துக்கொண்டேன் பகல் நேரம் இந்த இடம் எப்படி இருக்கும் ? அல்லது இப்படியா இருக்கும் ? நிச்சயம் இப்படி இருக்காது .    நிலவு,காற்று,என எப்போது இரவானாலும் ரசிக்கும் என்னை அன்று எதையும் ரசிக்க விடாத படியான வெளிச்சத்தில் ஒரு அமானுஷ்யத்தை கொண்டு இருந்தது அந்த இரவு . எனக்கு முன்னேயும், பின்னேயும் சாலை மின்விளக்கு மஞ்சள் நிறம் இனம்புரியாத விரக்திக்கு உரமிட்டது . நான்  நடந்துக்கொண்டு இருந்தேன்.  ஆங்காங்கே மின்விளக்குகள் விட்டு விட்டு எரிந்தது . கைகளில் ...